உறவுகளை மறுசீரமைக்க பாடுபடும் கனடாவும் சீனாவும் தங்கள் வர்த்தகப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு முன்னோக்கிச் செல்லும் வழியொன்று இருப்பதாக Saskatchewan முதல்வர் Scott Moe கூறுகிறார்,
அதாவது இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதற்கான வழியை
மத்திய அரசாங்கம் கண்டுபிடித்து வருகிறது என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக அவர் கூறுகின்றார். September இல் சீனாவிற்கு வர்த்தகப் பயணமாகச் சென்ற Moe, சீனாவின் மின்சார வாகனங்கள் (EV) மீதான தனது வரிகளை கனடா உயர்த்த வேண்டும் என்றும், இதனால் Beijing அதன் canola வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கனடா புள்ளிவிவரத் தரவுகளின்படி, சீனாவுடனான கட்டண தகராறு காரணமாக, Saskatchewan இன் சீனாவிற்கான ஏற்றுமதி August மாதத்தில் கடந்த ஆண்டை விட 76 சதவீதம் குறைந்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரிகளை விதிக்க முன்னாள் பிரதமர் Justin Trudeau வின் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட முடிவை கனடா தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்தக் கொள்கை அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த October மாத இறுதியில், South Korea வில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் போது Carney சீன ஜனாதிபதி Xi Jinping ஐ சந்தித்தார். எட்டு ஆண்டுகளின் பின்னர் இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பு இதுவாகும்.

