கைது கனடாவின் மிகவும் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான 23 வயது நிக்கலஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மாகாண பொலிஸார் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் குறித்த நபரை தேடி வந்தனர்.
கொள்ளை மற்றும் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஐந்து வருடம், ஐந்து மாதம் மற்றும் பத்து நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் தண்டனைக்காலத்தில் தப்பியோடியிருந்தார்.
அக்டோபரில் வெளியிடப்பட்ட கனடாவின் அதிகம் தேடப்படும் 25 பேரின் பட்டியலில் சிங் 15வது இடத்தில் இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டொரோண்டோவில் பாத்ரஸ்ட் Bathurst மற்றும் டுன்டாஸ் Dundas தெருக்களின் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த பகுதியில் சந்தேகமான வாகனம் இருப்பதாக அழைப்பு வந்ததால், பொலிஸார் விசாரணைக்கு சென்றபோது சிங் எவ்வித எதிர்ப்பும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் ஒரு துப்பாக்கி, நீட்டிக்கப்பட்ட மேகசின் மற்றும் குண்டுகளையும் சம்பவ இடத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.
சிங்கிற்கு எதிராக தடைசெய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருத்தல், ஏற்றப்பட்ட துப்பாக்கி வைத்திருத்தல், துப்பாக்கியுடன் வாகனத்தில் இருந்தது உள்ளிட்ட ஆறு துப்பாக்கிச்சம்பந்தமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

