அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த G20 மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துவது தொடர்பில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீளவும் வர்த்தகம் தொடர்பில் விவாதங்களை முன்னெடுக்கும்போது நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரி எதிர்ப்பு விளம்பரம் தொடர்பான சர்ச்சைகளின் காரணமாக ட்ரம்ப் நிர்வாகம் கனடாவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

