கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது.
அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்தின் வரைவு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்படலாம் என்று மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதாவது அல்பெர்டா விஸ்கி என்ன? அதற்கான தரநிலைகள் என்ன?—இவற்றை நிர்ணயிக்க இந்த சட்டம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த பணியானது செயற்கை நுண்ணறிவு திறன்களை சோதிப்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் என அமைச்சர் டேல் நாலி தெரிவித்துள்ளார்.
இது முக்கியமான விஷயம் தான், ஆனால் இதில் இதயமும் நுரையீரல்களும் இல்லை. யாருடைய வாழ்க்கையும் ஆபத்தில் கிடையாது.
தானியங்கள், தண்ணீர், டிஸ்டில்லேஷன் போன்ற செயல்முறைகளை விதிகளாக்கும் சட்டமாதலால் ஏதேனும் தவறு ஏற்பட்டாலும் சரி செய்ய முடியும்,” என நாலி கூறினார்.
நாலி, தொழில்நுட்ப அமைச்சர் நேட் க்லுபிஷ் மற்றும் நீதி அமைச்சர் மிக்கி அமெரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
“சட்டத்தை AI எழுதட்டும்; பின்னர் மனிதர்கள் மதிப்பாய்வு செய்யலாம். தவறுகள் இருந்தால் திருத்தும் வாய்ப்பும் இருக்கும்,” என்றார்.
இதன் மூலம் அல்பெர்டா, கனடாவில் முதன்முறையாக AI-ஐ பயன்படுத்தி சட்டமூலம் தயாரிக்கும் மாகாணமாக மாறக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த முயற்சி “புதுமையானதும் முன்னோடியானதும்” என அல்பெர்டா பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு நிபுணர் ஜோனத்தன் ஷாஃபர் கூறினார்.
எனினும் ஆனால் மனிதர்களின் கண்காணிப்பும் பொறுப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

