கனடிய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் புதிய சட்டமொன்றை ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்டாரியோ அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்டுதோறும் மாகாணம் செலவிடும் $30 பில்லியன் கொள்முதல் செலவில் ஒன்டாரியோவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கட்டாய முன்னுரிமை வழங்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த “Buy Ontario Act” மசோதா வியாழக்கிழமை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்து வரும் வரிகளால் கனடா எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்திற்கு பதிலாக இது கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
கொள்முதல் செயல்முறையில் ஒன்டாரியோவில் தயாரித்த பொருட்கள் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், பின்னர் கனடாவில் தயாரித்தவை இரண்டாம் விருப்பம் என சட்டம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ அமைச்சகங்கள், அரசு அமைப்புகள், பொது துறை நிறுவனங்கள், நகராட்சிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்கள் எல்லோருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

