நுகேகொடையில் எதிர்க்கட்சி கூட்டம் நடந்த இடத்தில் நிகழ்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்சாரம் தடைபட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த மின்சார தடை முன் திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு ஏற்பாட்டாளர்கள் மேலதிக மின்சார விநியோகத்தை கோரவில்லை, மேலும் நுகேகொடை திறந்தவெளி அரங்கில் கிடைக்கக்கூடிய திறனை விட மின்சாரத் தேவை அதிகமாக இருந்ததும் என்றும், தெரிவிக்கப்படுகிறது.
LECO நிறுவனம் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக துரிதமாக செயற்பட்டதுடன், கூட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

