2.4 C
Scarborough

‘மதத்தின் பெயரால் பிறரை கொல்வது, காயப்படுத்துவது தவறானது’ – ஏ.ஆர்.ரகுமான்

Must read

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ‘இசைப்புயல்’ என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

7 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர் ஸ்லம்டக் மில்லியினர் படத்திற்கு இசை அமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றார். இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரகுமான், தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப்குமார் ஆகும். அவரும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரை அல்லாஹ் ரக்கா ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். மேலும், சூபி தத்துவம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரான அவர், ‘ராக்ஸ்டார்’. ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சூபி இசையை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரகுமானிடம் மதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article