நடிகர் தனுஷ் குறித்த தனது பேட்டி சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஷ்ரேயாஸ் குறித்து மான்யா ஆனந்த் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. இது இணையத்தில் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக மான்யா ஆனந்த் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மான்யா ஆனந்த், “வணக்கம், இது சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள்.
அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். மேலும், அந்த நபரிடமே, அவருடைய எண்ணை தனுஷ் சார் குழுவினருடன் பகிர்ந்து சரிபார்ப்பேன் என்றும் சொன்னேன் எனவும் கூறியிருப்பேன். முன்முடிவுகளுக்கு வரும் முன்னர் முழுமையான வீடியோவைப் பார்க்கவும். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
hindutamil

