பிரதமர் Mark Carney யின் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஒரு வருடத்திற்குள் நாட்டை மீண்டும் தேர்தலுக்கு அனுப்புவதா என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முடிவு செய்யவுள்ளனர்.
அதற்கமைய, இன்று பிற்பகல் திட்டமிடப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு, சிறுபான்மை Liberal களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பாக அமையவுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள Liberal களுக்கு மற்றொரு கட்சியின் ஆதரவு தேவை அல்லது அவர்களின் கட்சிக்கு வெளியே குறைந்தபட்சம் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதுவரை, எதிர்க்கட்சிகள் வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராகப் பேசி வருகின்றன, இது அவர்களின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், Liberal கள் தங்களுக்குத் தேவையான வாக்குகளை எங்கிருந்து பெறுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறுகின்றன.
அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளும்போது குறைவாக செலவு செய்து அதிக முதலீடு செய்வதற்கான திட்டமாக Liberal கள் தங்கள் வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்தனர்.
Ottawa வின் செலவு சேமிப்பு இலக்குகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர், வரவுசெலவுத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட $90 பில்லியன் புதிய செலவினங்களை முன்மொழிகிறது, அதில் பெரும்பாலானவை மூலதன உருவாக்கத்தில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

