மலையக மக்களுக்கு வெறுமனே 200 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கி நழுவிச் செல்ல முடியாதென கூறும் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனால் அது 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு பானும் வாழைபழமும் வழங்குவது போன்றது எனவும் சாடினார்.
இதுகுறித்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், மலைகய மக்கள் மீதான ஏமாற்று வேலைகளுக்கு ஆதங்கப்பட்டு தான் வெகு விரைவில் மலையக களம் காணப் போவதாகவும் சூளுரைத்தார்.
இதன்போது தனது காதல் நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட அவர் தனது மாமானர் பிரசித்தமான மலையக பேராசிரியர் என்றும் அவர் 18க்கும் மேற்பட்ட புத்தகங்களில் மலையகத்தின் நிலைமை பற்றி கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.
மலையக அரசியல் செய்ய தனக்கு விரும்பம் இல்லாவிட்டாலும் மலையகம் முட்டாள்களை அனுப்பியிருப்பதாகவும், தான் மலையகத்தில் நிற்கும் போது இப்போதிருக்கும் எந்த அரசியல்வாதிகளுக்கும் இருக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.

