நேற்று முன்தினம் பிற்பகல் வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கம் தப்பிப்பிழைக்க Conservatives உதவினார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் Bloc Quebecois இன் வரவுசெலவுத்திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக 307 வாக்குகளும், ஆதரவாக 30 வாக்குகளும் நாடாளுமன்றத்தில் பதிவாகின.
வியாழக்கிழமை, வரவுசெலவுத்திட்டத்தை நிராகரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த Conservatives தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க Bloc மற்றும் NDP இணைந்து செயல்பட்டிருந்தன.
வரவுசெலவுத்திட்டம் வெளியிடப்பட்ட நாளில் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள களத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஒரு குழப்பமான வாரத்தை இது முடிவுக்குக் கொண்டுவருகிறது.
வியாழக்கிழமை பிற்பகல் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux அரசாங்கத்தில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக பல நாட்கள் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, இராஜினாமா செய்வதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார். அதாவது தனது இராஜினாமா ஒரு நீண்டகால முடிவு என்று தெளிவுபடுத்தினார். இது அநேகமாக வசந்த காலமாக இருக்கும் என எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தின் அறிக்கை கூறுகின்றது.
November 17 ஆந் திகதி வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

