தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்த நாக சைதன்யா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தள்ளி வைத்துள்ளது. நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி சவுத்ரி. பிவிஎஸ்என் பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். ‘விருபாக்ஷா’ இயக்குநர் கார்த்திக் வர்மா அடுத்து இயக்கும் த்ரில்லர் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இதில் மீனாட்சி சவுத்ரி, லக்ஷயா என்ற தொல்லியல் ஆய்வாளராக நடிக்கிறார். அவருடைய முதல் தோற்றத்தை திங்கட்கிழமை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த விபத்து காரணமாக முதல் தோற்ற போஸ்டர் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிக்கும் இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார்.

