ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உலகளவில் ரூ. 818 கோடிக்கு மேல் வசூலித்து 2025 ம் ஆண்டில் இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

