6 C
Scarborough

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு செய்து கொடுப்பது யார்? நாமல் ரஜபக்ச கேள்வி!

Must read

போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக  தப்பிச் செல்ல வசதியாகக் கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊழல்மோசடி – அதிகாரத்துஸ்பிரயோகம் ஆகியவற்றை இல்லாதொழிப்பதாக கூறுகின்ற இந்த அரசாங்கம், சில பிரதான குற்றவாளிகள் இரகசியமாக கடவுச்சீட்டு செய்து கொண்டு, தப்பிச் செல்வதை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச, இது பற்றி இன்று செவ்வாய்கிழமை இலத்திரனியல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார்.

இலங்கைத்தீவில் மிகச் சமீபத்திய நாட்களாக பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்கின்றனர். பல கொலைகளின் பின்னணிகளும் அம்பலமாகி வருகிறன. இந்த நிலையில் உண்மையான சில குற்றவாளிகள் தப்பிக்கின்றனர்.

அந்தக் குற்றவாளிகள் கொழும்பை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுக்கும் பிரபலங்கள் யார் என்று கேள்வி எழுப்பிய நாமல் ராஜபக்ச, செவ்வந்தி நேபாளத்தில் கைதான பின்னர் தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

தன்னையும் தனது குடும்பதையும் தங்கள் கட்சியையும் திட்டமிட்டு ஓரம்கட்டும் வகையில், சில சக்திகள் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article