மக்களின் அன்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களிடையே செலவிட்டதால் மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுடன் தமக்கு இருப்பது அரசியல் உறவு மாத்திரம் அல்ல இதயபூர்வமான ஒரு பிணைப்பாகும் என தெரிவித்துள்ள அவர், மக்களுக்கும் தனக்குமான உறவை உடைக்கும் முயற்சிகள், மேலும் பிணைப்புகளை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் செலவிடுகின்ற நேரம் முழுவதும் ஓர் தலைவராக மிகப்பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பிரிமைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இருந்த அவரது அரச வாசஸ்தளத்திலிருந்து வெளியேறி தமது சொந்த இடமான தங்காலையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

