ஸ்காபரோ, ரூஜ் பார்க் தேர்தல் தொகுதியின் 25ஆம் வட்டாரத்திற்காக இன்று நடந்த இடைத் தேர்தலில் நீதன்சான் வெற்றிபெற்றுள்ளார்.
37 வாக்களிப்பு நிலையங்களில் நடந்த தேர்தலில் நீதன் சான் 5174 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
டொக்டர் அனு சிறிஸ்கந்தராஜா இரண்டாம் இடத்தில் 3374 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனைத்தவிர அந்தத் தொகுதியில் போட்டியிட்ட ஏனைய இரண்டு வேட்பாளர்களும், 6ஆவது மற்றும் எட்டாவது இடத்திற்கு வந்துள்ளனர்.
ரூஜ் பார்க் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக கெரி ஆனந்த சங்கரியும், ஒன்டாரியோ மாகாண உறுப்பினராக விஜய் தணிகாசலம் பதவி வகித்து வரும் நிலையில் தற்போது அந்தத் தொகுதியின் 25ஆம் வட்டாரத்தின் கவுன்சிலராக நீதன்சான் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

