கனடாவில் வேலைபார்க்கும் மூன்றில் இரண்டு பகுதியினர் பணி ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளார்கள்.
இந்த நிலையில் அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு இளைஞர்கள் இல்லை என கூறப்படுகிறது.
இது கனடாவின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தைக்கு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஒரு புதிய RBC அறிக்கை கூறுகிறது.
2024 ஆம் ஆண்டு அதிகளவான பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 2030 ஆம் ஆண்டுக்குள் தொழில் செய்வோரில் அதிகமானோர் 65 வயதை எட்டுவார்கள், இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய அலையைக் கொண்டுவரும்” என்று RBC பொருளாதார நிபுணர் சின்தியா லீச் அறிக்கையில் தெரிவித்தார்.
இதேநேரம் கனடாவில் பிறப்பு வீதமும் குறைந்துவருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறுகிய காலத்தில், அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடா அதிக வேலையின்மையைக் கண்டாலும், வேலையின்மை விகிதம் விரைவில் உச்சத்தை எட்டக்கூடும் என்று RBC அறிக்கை கூறியது.
கனேடிய இளைஞர்களின் வேலைக்கும், வசிப்பிடங்களுக்கும் வெளிநாட்டு மக்கள் போட்டியாக காணப்படுவதாக அங்கு புலம்பெயர்வோரை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இளைஞர் பற்றாக்குறை கனேடிய பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துமென எதிர்வு கூறப்படுகிறது.

