வடக்கு யோர்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்தில் ஒருவர் படுகாயமடைந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 8:21 மணியளவில் வில்சன் அவென்யூவின் வடக்கே உள்ள ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் சாக்ஃபார்ம் டிரைவ் பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
“கடும், உயிருக்கு ஆபத்தான” காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது சந்தேக நபர்களை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் விசாரணை இடம்பெற்று வருகின்றன.

