5.1 C
Scarborough

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி லண்டன் பயணம்!

Must read

மூன்று நாள்கள் அரசமுறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, இன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த அல்பானீஸி அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.

இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இதற்கான முக்கிய நகர்வாகவே பிரதமரின் லண்டன் விஜயம் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவானது பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காமீதே முழு நம்பிக்கை வைத்திருந்தது.

எனினும், ட்ரம்பின் அணுகுமுறையால் அது கேள்விக்குறியாகியுள்ளது. இதனையடுத்து மாற்று வழி பற்றி கன்பரா கரிசணை செலுத்தியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் உட்பட முக்கிய தரப்பினரை பிரதமர் அல்பானீஸி சந்திக்கவுள்ளார்.
இதன்போது ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம், காசா விவகாரம் மற்றும் உக்ரைன் போர் என்பன பற்றி இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article