0.8 C
Scarborough

கடலில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் – தக்க சமயத்தில் உதவிய இளைஞர் குழு!

Must read

காலி கோட்டை கடல் பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்களை இளைஞர் குழு ஒன்று மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

காலி கோட்டையில் அமைந்துள்ள ஒல்லாந்தர் வைத்தியசாலை கட்டடத்தின் பின்புறமாக உள்ள பாறையின் மேல் அமர்ந்திருந்த பகுதியில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் எதிர்பாராத விதமாக கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது அருகிலிருந்த இளைஞர்கள் குழுவொன்று உடனடியாக செயல்பட்டு இருவரையும் காப்பாற்றி காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.

கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் காதலர்கள் எனவும் பாறையின் மீது அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக உயர்ந்து வந்த கடல் அலையில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த பெண் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவித்தனர்.

தக்க சமயத்தில் ஒல்லாந்தர் கட்டடத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாக காமினி என்னும் அதிகாரி விரைந்து கடலில் குதித்து இவரையும் மீட்க முயற்சித்த போது, அருகில் இருந்த சுற்றுலா உணவகங்களில் பணிபுரியும் இளைஞர் குழுவும் அவருக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய பெண் அஹங்கம பகுதியை சேர்ந்தவர் எனவும் இளைஞர் லுனுமோதர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article