இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ஜி. ட்ரூயின் இடையேயான சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் மோடிக்கும் கனடா பிரதமர் கார்னிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் நீட்டிப்பாக இந்த இருதரப்பு சந்திப்பு நடைபெற்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இச் சந்திப்பின் போது, அரசியல் தலைமையின் உயர் மட்டங்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் தெளிவான உந்துதலை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
தீவிரவாத எதிர்ப்பு, நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உளவுத்துறை பகிர்வு உட்பட இருதரப்பு உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

