காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக அங்கீகரிப்பதற்கு முன்னர் கனடா அனைத்து ஆதாரங்களையும் பெற்று அதனை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐநாவிற்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்பதை அங்கீகரிக்கும் முன் கனடாவிற்கு “அனைத்து ஆதாரங்களும் தேவை” என்றும் அது குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐ.நா தீர்மானம் அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பே முதல் முக்கியத் தீர்மானம் என்று ஐநாடுகளுக்கான பிரதிநிதி டேவிட் லாமெட்டி குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் நிலைமை குறித்து அதிகரித்து வரும் கவலையை ஐநா அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. விசேட அறிக்கையாளர், “இஸ்ரேல் இனப்படுகொலை மேற்கொள்கிறது என்பதை குறிக்கும் வரம்பு பூர்த்தி செய்துள்ளது எனவும் அதனை ஏற்க போதுமான நியாயமான காரணங்கள் உள்ளன” என தீர்மானித்துள்ளார்.
இந்த நிலையில் கனடா பிரதிநிதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.