எட்டோபிகோக்கில் நடந்த ஒரு கத்திச் குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மற்றொருவர் காவலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் எப்போது இடம்பெற்றதென்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கத்தியுடன் ஒருவர் இருப்பதாக முறைப்பாடு வந்ததை அடுத்து, கிப்ளிங் அவென்யூ மற்றும் ஹின்டன் சாலை பகுதிக்கு அதிகாரிகள் சென்றதாகவும் டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேநேரம் சம்பவ இடத்தில் முகம் மற்றும் கைகளில் காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் 30 வயதுடைய ஒரு சந்தேக நபரும் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் சூழ்நிலைகள் “இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன” என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.