மேஷம்
அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். பழுதான மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
அதிர்ஷ்ட நிறம் – பொன்நிறம்
ரிஷபம்
உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உங்கள் சக பணியாளர்கள் உங்களுடன் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் உங்கள் பணிகளில் எவ்வித குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை. சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். காதல் கசக்கும். தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம் – பச்சை
மிதுனம்
திருமண யோகம் உள்ளதால் இனியும் காலம் தாழ்த்தாமல் இல்லற வாழ்வில் இறங்க இதுவே நல்ல தருணமி மேற்படிப்பு கற்க ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரியை அதிகம் நம்ப வேண்டாம். அவர்கள் அனைவரும் தங்கள் சொத்திற்காக காத்திருக்கின்றனர். உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம் -இளஞ்சிவப்பு
கடகம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். அதனை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் -கருநீலம்
சிம்மம்
உத்தியோகத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கலைத்துறையினர்கள் உங்களின் கற்பனைத் திறன் வளரும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஓரளவு பணம் வரும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை
கன்னி
எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடுவீர்கள். பாராட்டு மற்றும் விருது தேடி வரும். விவசாயிகளுக்கு விளைச்சல் இரட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் – சாம்பல்
துலாம்
கௌரவப் பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு
விருச்சிகம்
அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பெண்கள் பொய்யாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர்கள் ஆதரிப்பார்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாக்கில் கவனம் தேவை. இருக்கும் இடத்தில் நல்ல வீடு கட்ட முயற்சித்த பணிகள் வெற்றி அடையும்.
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்
தனுசு
கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி தீர்க்கப்பாருங்கள். அவ்வப்போது மனஇறுக்கம், அசதி, சோர்வு வந்துப் போகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு புது பொறுப்புகள் தேடி வரும். முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் -வெள்ளை
மகரம்
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை
கும்பம்
நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் கூடும். அரசியலில் செல்வாக்குக் கூடும். புதிதாக வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் – பச்சை
மீனம்
பணவரவில் திருப்திகரமாக இருக்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும். முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்கள் சித்தியாகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா