10.4 C
Scarborough

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

Must read

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் பெங்களூரு அணி, தலைவாசை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 20-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டெழுந்த தலைவாஸ், எதிரணியை ஆல்அவுட்டாக்கி மளமளவென புள்ளிகளை திரட்டியது. முடிவில் தமிழ் தலைவாஸ் 35-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது. 5-வது லீக்கில் ஆடிய தலைவாசுக்கு இது 3-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 41-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாசை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article