கனடாவில் வேலை வாங்கித்தருவதாக இந்தியர் ஒருவரை ஏமாற்றிய மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர், சமூக ஊடகம் ஒன்றில் கனடாவில் வேலை குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு சம்பந்தப்பட்ட நபர்களை மொபைலில் தொடர்புகொண்டுள்ளார்.
அவர்கள் அவரை தங்கள் அலுவலகத்திற்கு வரச் சொல்ல அங்கு சென்ற அவரை மூன்று மாதங்களில் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்கள், அது தொடர்பான ஆவணங்களில் இருதரப்பினரும் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அந்த நபர் தனது வங்கிக்கணக்கிலிருந்து அவர்களுக்கு இந்திய மதிப்பில் மூன்று லட்ச ரூபாய் அனுப்பியுள்ளார்.
ஆனால், பணம் கொடுத்து பல மாதங்களாகியும் தன்னை அவர்கள் கனடாவுக்கு அனுப்பாததால் தனது பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் அவர்.
அவர்கள் அவருக்கு காசோலை ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். ஆனால், அது பவுன்ஸ் ஆகியுள்ளது.
ஆகவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பொலிசில் புகார் செய்துள்ளார். பொலிசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மூன்று பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.