டொராண்டோவில் உள்ள கிறிஸ்டி பிட்ஸ் பூங்காவில் “கனடாவின் முதல் தேசபக்த பேரணி” என்று அழைக்கப்படும் ஒரு பேரணி நடைபெற்றது.
அங்கு குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் புலம்பெயர்ந்த சமூகங்களை ஆதரிக்கும் எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதினர். இந்த சம்பவத்தால் டொராண்டோ பொலிஸார் 10 பேர் வரையில் கைது செய்துள்ளனர்.
“வெகுஜன குடியேற்றத்தை” நிறுத்தக் கோரி, குடியேற்ற எதிர்ப்புக் குழு, கனேடிய கொடிகளை ஏந்தி நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்றது.
இதேநேரம் நூற்றுக்கணக்கான எதிர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் கூடி, புலம்பெயர்ந்தோர் இங்கே தான் தங்குவார்கள்” உங்கள் எண்ணம் ஈடேறாது என கோஷமிட்டனர்.
இந்த மோதல் பதட்டமாக மாறிய நிலையில் பொலிஸார் தலையிட்டு, கிறிஸ்டி தெருவுக்கு அருகிலுள்ள ப்ளூர் தெரு மேற்கின் சில பகுதிகளை தற்காலிகமாக மூடி, பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேநேரம் வார்டு 11 கவுன்சிலர் டயான் சாக்ஸ் ஆரம்ப போராட்டத்தை “வெறுப்பு ஆர்ப்பாட்டம்” என்று அழைத்து, எதிர் போராட்டத்தில் இணைந்ததோடு பிரிவினை மற்றும் வெறுப்புக்கு எதிரான டொராண்டோவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
பேரணி ஏற்பாட்டாளரான ஜோ அனிட்ஜர்,இது கனேடிய குடிமக்கள் மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்ப்பாட்டம் என்று கூறியுள்ளார்.