சனிக்கிழமை இரவு வடக்கு யோர்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, நள்ளிரவுக்கு சற்று முன்பு விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்குப் பகுதிக்கு அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது சுடப்பட்ட ஒரு ஆண் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
அதிகாரிகள் வருவதற்கு முன்பே சந்தேக நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் விக்டோரியா பார்க் அவென்யூ ஃபார்ம்க்ரெஸ்ட் டிரைவ் மற்றும் கன்ஸ்யூமர்ஸ் வீதிக்கு இடையில் மூடப்பட்டது, அதே நேரத்தில் ஃபார்ம்க்ரெஸ்ட் டிரைவ் மீடோஏக்கர்ஸ் டிரைவ் மற்றும் விக்டோரியா பார்க் அவென்யூ இடையிலும் மூடப்பட்டது.
பொலிஸார்,மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை கேட்டு கொண்டுள்ளனர்.