ரிச்மண்ட் ஹில்லில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையம் ஒன்றில் ஒரு வாகனம் மோதி ஒரு குழந்தை கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து, பகல்நேர பராமரிப்பு மையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதாக ஒன்ராறியோ அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனினும் அவை குறித்து விசேட குழந்தை பராமரிப்புக்கான ஒன்ராறியோ கூட்டணி விமர்சனங்களையும் முன் வைத்துள்ளது.
குழந்தை பராமரிப்பு நிலையத்தின் ஜன்னல்கள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடத்தை கட்டுப்படுத்துதல், உள்ளிட்ட விடயங்களை அரசாங்கம் முன் மொழிந்துள்ளது.
இதேநேரம் இந்த முயற்சியை வரவேற்பதாக தெரிவித்துள்ள விசேட குழந்தை பராமரிப்புக்கான ஒன்ராறியோ கூட்டணி , பகல்நேர பராமரிப்பு திட்டங்களின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு “மேலோட்டமான ” தீர்வுக்கு எதிராக எச்சரித்துள்ளது.
வெவ்வேறு பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கான வெவ்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்
மறுசீரமைப்புகள் மற்றும் செயல்படுத்தலுக்கான நிதி உதவி குறித்தும் அந்த கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
மேலும் பரபரப்பான சாலைகளுக்கு அருகில் காணப்படும் மையங்களின் பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்தல்,புதிய வசதிகளுக்கான புதிய வடிவமைப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிடுதல் உள்ளிட்ட விடயங்களையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.