13.7 C
Scarborough

கொலையாளியென பிழையாக அடையாளம் காணப்பட்ட கனடிய முதியவர்!

Must read

அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கெர்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, கனடியர் ஒருவர் பிழையாக குற்றம்சாட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டொராண்டோவில் வசிக்கும் 77 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மைக்கேல் மல்லின்சன், புதன்கிழமை மதியம் தூக்கத்திலிருந்து எழுந்தபோது, அவரது மகளிடமிருந்து பதற்றமான அழைப்பு வந்துள்ளது.

“உங்கள் சமூக வலைதளக் கணக்குகளை உடனே நீக்குங்கள், உங்கள் பெயரும் புகைப்படமும் கெர்க் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு இணையத்தில் பரவி வருகிறது,” என்று மகள் எச்சரித்துள்ளார்.

மல்லின்சன் பின்னர் கூகுளில் தேடிப் பார்த்ததில், அவரது புகைப்படம் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் X (முன்னாள் Twitter) தளத்தில் பகிரப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்களில் அவரது புகைப்படம் சம்பந்தப்பட்டவரின் உருவத்துடன் பொருந்தவில்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டவரல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. நான் ஒரு சாதாரண மனிதன். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் எனது பெயர் குற்றச்சாட்டுடன் இணைக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியது எனுவும் சிலர் என்னை திட்டியும் மிரட்டியும் செய்தார்கள் என மல்லின்சன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அவர் முகநூல், இன்ஸடாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கெர்க் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளி இன்னும் பிடியிலில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஓடிப்போன ஒருவரின் புகைப்படம், வீடியோவை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் தாம் தொடர்ந்தும் அச்சமடைந்திருப்பதாக மல்லின்சன் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article