புரோ கபடி லீக்கின் 27ஆவது போட்டி இன்று இரவு நடைபெற்றது. இதில் யு.மும்பை- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் 23-15 என யு.மும்பை முன்னிலை பெற்றது.
2ஆவது பாதி நேர ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். இதனால் புள்ளிகளை குவித்தனர். கடைசி ரெய்டுக்கு முன்னதாக இரண்டு அணிகளும் 39-39 என சம புள்ளிகளில் இருந்தன. கடைசி ரெய்டு வாய்ப்பு பாட்னாவுக்கு கிடைத்தது.
மேலும் இது வாழ்வா? சாவா? (Do Or Die) ஆகும். ஆகவே புள்ளி எடுக்க வேண்டும். இல்லையெனில் ரெய்டர் ஆட்டமிழக்க நேரிடும். புள்ளி எடுக்கவில்லை என்றால் ரெய்டர் அவுட்டாகி யு.மும்பை வெற்றி பெற்று விடும். யு.மும்பை சைடு 5 வீரர்கள் மட்டுமே இருந்ததால் போன்ஸ் புள்ளியும் கிடைக்காது.
இந்த நிலையில் பாட்னா அணியின் அயன் ரெய்டு செய்தார். அவரால் யாரையும் தொட முடியவில்லை. இறுதியாக முயற்சிக்கும்போது சைடு லைனை மிதித்து பவுல் (Foul) முறையில் ஆட்டமிழந்தார். இதனால் யு.மும்பை 40-39 என த்ரில் வெற்றி பெற்றது.