15 C
Scarborough

இடைக்கால பிரதமரை பெயரிட்டது நேபாள போராட்டக்குழு!

Must read

நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 4 மணி நேரம் இந்த பேச்சு நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார்.

எனவே, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பின்புலம் ஏதுமில்லாதவர், நடுநிலையாகவும் நம்பகத்தன்மையுடன் செயல்படக் கூடியவர் என்ற அடிப்படையில் அவரை ‘டிக்’ செய்ததாக ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களில் விருப்பப்படி, இடைக்கால பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ள சுசீலா கார்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார். இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுசீலா கார்கி, தேர்தல் விவகாரம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர். நீதித் துறை மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர் என்று போற்றப்பட்டவர். இவருக்கு எதிராக நேபாள நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு, மக்களின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்ட வரலாறும் உண்டு.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article