மேஷம்
ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். செலவு அதிகரிக்கும். நண்பர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். பெரியவர்களிடம் பணிவு தேவை. அண்டை வீட்டார்கள் உதவுவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். எடுத்த காரியம் வெற்றியடையும். தன்னம்பிக்கை மிளிரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இரும்பு வியாபாரம் வருவாயை அதிகரிக்கும்.கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
தம்பதிகளின் அன்யோன்யம் கூடும்.பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள்.மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
பண வரவு மேம்படும். குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் வரும். ஆனால், உடனே மறைந்துவிடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் சரணடைவர். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பல காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தம்பதிகளிடையே நல்ல புரிதல் உருவாகும். முதுகு தண்டில் வலி வந்துப் போகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
சேமிப்பில் கவனம் தேவை. தாமதித்த பணம் கைக்கு வரும். வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். வழக்கில் திருப்பம் நிகழும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வங்கி கணக்கு உயரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
நண்பர்களுடன் நல்ல சந்திப்பு உண்டு. ஆன்மிக சிந்தனை வரும். குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள். அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். உடல் நலம் சிறக்கும். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
வேலைப்பளு குறையும். உங்கள் வார்த்தைகள் மதிப்பு பெறும். பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். பிரிந்தவர் ஒன்று சேருவர். மாணவர்கள் திறன் கூடும். உடல் வலி நீங்கும். கணவரிடம் அனுசரிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை