போலந்து நாட்டுக்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷ்யாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் சில ஆளில்லா ட்ரோன்கள், போலந்து நாட்டுக்குள் ஊடுருவியதாகவும் இதனையடுத்து, ரஷ்யாவின் ட்ரோன்களை போலந்து இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலோ போர் நடவடிக்கையோ, ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பின் மீதான செயல்பாடாகக் கருதப்படும்.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று போலந்தும் உக்ரைனும் நேட்டோ அமைப்பை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.