ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தின் 17வது வீரராக சகலதுறை வீரர் ஜனித் லியனகே இணைக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று ஆரம்பமாகும் ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி சிம்பாப்வே தொடரை நிறைவுசெய்த பின்னர் அங்கு சென்றடைந்துள்ளது.
இதில் சிம்பாப்வேயில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த ஜனித் லியனகே நாடு திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வனிந்து ஹஸரங்கவுடன் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணித்துள்ளார்.
ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்தில் 17 வீரர்களை இணைக்க முடியும் என்ற நிலையில் இலங்கை அணி 16 பேர்கொண்ட குழாத்தை ஏற்கனவே அறிவித்திருந்தது. இறுதியாக மத்தியவரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் ஜனித் லியனகே குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆசியக்கிண்ணத் தொடரின் குழு B இல் இடம்பெற்றுள்ள இலங்கை பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங் கொங் அணிகளை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.