எல்ல கோர விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு அதில் 06 ஆண்களும் , 09 பெண்களும் அடங்குவர்.
பின்னணி –
எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பத்து மரணமடைந்த நிலையில் சுமார் 15 பேர் படுக்காயமடைந்துள்ளனர்.
24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்..
சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது