19.2 C
Scarborough

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

Must read

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 10-ம் நிலை வீர​ரான சகநாட்​டைச் சேர்ந்த லோரென்சோ முசெட்​டி​யுடன் மோதி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் ஜன்​னிக் சின்​னர் அரை இறு​திக்கு தொடர்ச்​சி​யாக முன்​னேறு​வது இது 5-வது முறை​யாகும். இந்த ஆண்​டில் நடை​பெற்ற அனைத்து கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் அவர், அரை இறு​தி​யில் கால்​ப​தித்​துள்​ளார். இந்த வகை​யில் அவர், கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் 26 வெற்​றிகளை தொடர்ச்​சி​யாக குவித்​துள்​ளார்.

அரை இறு​தி​யில் ஜன்​னிக் சின்​னர், 25-ம் நிலை வீர​ரான கனடா​வின் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசி​முடன் மோதுகிறார். பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம் கால் இறுதி சுற்​றில் 8-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினாரை 4-6, 7-6 (9-7), 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் போராடி வீழ்த்​தி​னார். இந்த ஆட்​டம் 4 மணி நேரம் 10 நிமிடங்​கள் நடை​பெற்​றது. கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம் அரை இறு​திக்கு முன்​னேறு​வது இதுவே 2-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற யுஎஸ் ஓபன் தொடரில் அரை இறு​திக்கு முன்​னேறி​யிருந்​தார்.

பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம், கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் போட்​டித் தரவரிசை​யில் உள்ள 3 வீரர்​களை வீழ்த்​து​வது இதுவே முதன்​முறை​யாகும். நடப்பு தொடரில் அவர், 3-வது சுற்​றில் 3-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவை​யும், 4-வது சுற்​றில் 15-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவை​யும் வீழ்த்​தி​யிருந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் 4 முறை சாம்​பியன் பட்​டம் வென்ற 23-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசா​கா, 11-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் கரோலினா முச்​சோ​வாவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக், 8-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அமண்டா அனிசிமோ​வாவுடன் மோதி​னார். இதில் அமண்டா அனிசிமோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். கடந்த இரு மாதங்​களுக்கு முன்​னர் நடை​பெற்ற விம்​பிள்​டன் இறு​திப் போட்​டி​யில் இகா ஸ்வியா டெக், அனிசிமோ​வாவை தோற்​கடித்து இருந்​தார். இதற்கு தற்​போது அனிசிமோ​வா பதிலடி கொடுக்​கும்​ வித​மாக கால்​ இறு​தி ஆட்​டம்​ அமைந்​திருந்​தது.

அரை இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியானது குரோஷியாவின் நிகோலா மெக்டிக், அமெரிக்காவின் ராஜீப் ராம் ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-7(8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் யுகி பாம்ப்ரி அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article