ரஷ்யாவுக்காக “தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரில் சீனாவின் 80ஆவது ஆண்டு நிறைவு வெற்றியைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு, கிம் மற்றும் புட்டின் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் “உங்களுக்கும் ரஷ்ய மக்களுக்கும் நான் ஏதாவது செய்ய முடிந்தால், அதை ஒரு சகோதரப் பொறுப்பாகக் கருதுகிறேன்” என்று கிம் புட்டினிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தடைகளை எதிர்கொண்டு இரு தரப்பினரும் கடுமையான சவால்களை எதிர்கொண்ட நேரத்தில், 2024 இல் இரு நாடுகளும் ஒரு வலுவான பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.