19.6 C
Scarborough

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் – ஒருவர் உயிரிழப்பு

Must read

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை ஒரு விமானம் தீப்பற்றி எரிந்ததோடு , மற்றொரு விமானம் அடையாளம் தெரியாத அளவுக்கு உருகுலைந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பதாவது,

செஸ்னு 172 மற்றும் EA300 ரக விமானங்கள், கொலரடோ விமான நிலையத்தை நெருங்கி வந்த போது, எதிர்பாராத விதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் ஒரு விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்றொரு விமானம் கடுமையாக சேதமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து நேரிட்ட இடத்தில் இருந்த மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களை விரைவாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவும் உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய விமானங்களில் இருந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article