19.1 C
Scarborough

எல்லை கடக்கும் போது அதிகரித்து வரும் அமெரிக்காவின் சோதனை!

Must read

புதிய தரவுகள் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) மூலம் அதிக எண்ணிக்கையிலான மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்படுவதைக் காட்டுவதால், கனடா மக்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும்போது அவர்களின் உரிமைகள் என்ன என்பது தொடர்பாக ஓர் ஆய்வு தெளிவு படுத்தியுள்ளது.

அதாவது பயணம் மேற்கொள்ளும் அனைவரும் அவர்களிடம் தொலைபேசியைக் காட்ட வேண்டும், ஆனால் உங்கள் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விடயங்கள் உள்ளன, மருத்துவர் அல்லது வழக்கறிஞர் போன்ற சலுகை பெற்ற தகவல்களைக் கொண்ட எவரும் அதற்கான ஆதாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் அத்துடன் அந்த சலுகையை உடனடியாக உறுதிப்படுத்தவும் வேண்டும்.

அந்த விதிவிலக்குகளைத் தவிர, ஒரு எல்லையில் கையால் மேற்கொள்ளும் தேடலுக்கு எதிராக சராசரி கனேடியனுக்கு அதிக பாதுகாப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், நியாயமான சந்தேகம் இல்லாமல் உங்கள் தொலைபேசியை இன்னும் முழுமையாகத் தேடுவதை எதிர்க்கும் உரிமை பயணிகளுக்கு உண்டு. Password மூலம் சாதனங்கள், folders மற்றும் apps போன்றவற்றை பாதுகாக்கலாம் என்றாலும் ஒரு எல்லை முகவரிடமிருந்து தங்கள் Password மறைக்க விரும்பினால் அதற்காக வழக்குத் தொடர வேண்டும்.

மேலும், கூடுதல் ஆய்வுக்காக, ஐந்து நாட்கள் வரை மேலதிக அங்கீகாரம் எதுவும் இல்லாமல் CBP முகவர்கள் எந்தவொரு சாதனத்தையும் பறிமுதல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், CBP இன் தகவலின் படி, சாதனத் தேடல்கள் ஒட்டுமொத்த எல்லைக் கடப்புகளின் எண்ணிக்கையில் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளன. 2024 ஆம் ஆண்டில் நுழைவுத் துறைமுகங்களில் செயலாக்கப்பட்ட 420 மில்லியன் பயணிகளில், 47,047 பேர் மட்டுமே தங்கள் மின்னணு சாதனங்களைத் தேடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, இது அமெரிக்காவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளிலும் 0.01 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article