5.4 C
Scarborough

வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கக் கூடாது ; கனடிய எதிர்க்கட்சி!

Must read

வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடாது என கனடிய கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.

கனடா இளைஞர்களின் வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆளும் லிபரல் அரசு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை அதிக அளவில் அனுமதிப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தகவலின்படி, ஜூலை மாதத்தில் இளைஞர் வேலை இழப்பு விகிதம் 14.6% ஆக உயர்ந்துள்ளது.

இது 2010-க்கு பின்னர் (கோவிட்-19 காலத்தைத் தவிர்த்து) மிக உயர்ந்த எண்ணிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த அளவைக் கடந்தும் தற்காலிக தொழிலாளர் வீசாக்களை வழங்கியுள்ளதாக பொய்லிவ்ர், கூறியுள்ளார்.

இதேவேளை, வெளியிடப்பட்ட 1,05,000 வீசாக்களில் பெரும்பாலானவை புதுப்பிப்புகள் என்றும், புதியவர்களின் எண்ணிக்கை 33,722 மட்டுமே எனவும் குடிவரவு துறை விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து, குடியேற்றக் கொள்கை மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சினை கனடாவில் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

லிபரல் அரசின் பலவீனப் புள்ளியாகவும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தேர்தல் பிரச்சார ஆயுதமாகவும் இது கருதப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article