17.7 C
Scarborough

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கையொப்பத்துடன் நீதியின் ஓலம் ஐ.நாவுக்கு!

Must read

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா.வுக்குச் செல்லவுள்ளது என்று தாயகச் செயலணி அமைப்பின் வடக்குக்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு, கிழக்கில் ஆரம்பமானது.

இந்தப் போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணம் – செம்மணியில் ஆரம்பமாகி இன்று முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” எனும் கையொப்பப் போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்தக் கையொப்பப் போராட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர்.

முன்பதாக கடந்த ஐந்து நாட்களாகத் தமிழர் தாயகமெங்கும்
முன்னெடுக்கப்பட்ட இந்தக் கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்தப் போராட்டம் வலியுறுத்துகின்றது.” – என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article