12.4 C
Scarborough

காஸாவில் பட்டினிச் சாவு – 303ஆக அதிகரிப்பு!

Must read

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது. இதில் 117 போ் சிறுவா்கள்.

இது தவிர, காஸா முழுவதும் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 75 போ் உயிரிழந்தனா். இதில், உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையத்துக்கு வந்த 17 பேரும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், காஸாவில் கடந்த 2023 ஒக்டோபா் 7-ஆம் திகதி முதல் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இதுவரை 62,819 போ் உயிரிழந்ததோடு 1,58,629 போ் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article