கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறையும் சாத்தியங்கள் கிடையாது என பொருளியல் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
செப்டம்பர் 1 முதல், அமெரிக்கப் பொருட்களுக்கு கனடா விதித்திருந்த 25% எதிர்-வரிகள் (counter-tariffs) நீக்கப்படவுள்ளன.
எனினும், உணவுப் பொருட்களின் விலைகள் உடனடியாகக் குறையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைகள் உடனே குறையாது, ஆனால் விரைவில் குறையும் எனவும் சில வாரங்களில் விலைகள் குறையும் எனவும் குவெல்ஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக் வான் மாசோவ் தெரிவித்துள்ளார்.
காய்கறிகள், பழங்கள், காப்பி, தேநீர், மாவு, சர்க்கரை, பாஸ்தா, ஆரஞ்சுப் பழச்சாறு போன்றவை விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நீண்ட ஆயுட்காலம் கொண்ட உணவுப் பொருட்களின் விலை குறைவது கால தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை முதலில் குறையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சாக்லேட், பிட்னட் பட்டர், கேச்சப், மசாலா, பல் துவைக்கும் மருந்து, பாட்டில் தண்ணீர், காகிதத் துடைப்பான் போன்றவை — விலை குறைய அதிக நாட்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.