கனடாவின் பர்லிங்டனில் இடம்பெற்ற சாலை விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து கெர்ன்ஸ் வீதி Kerns Road மற்றும் டுன்டாஸ் வீதி Dundas Street சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கிழக்கு திசையில் சென்ற ஹோண்டா மோட்டார் சைக்கிள், மேற்கு திசையில் சென்ற ஃபோர்டு வாகனத்துடன் மோதியது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிள் மற்றும் எஸ்.யூ.வீ. வாகனம் மோதியதில் அங்கு நின்றிருந்த இன்னும் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாட்டர்டவுனைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எஸ்.யூ.வீ வாகனத்தை செலுத்திய 56 வயது மில்டன் பகுதி நபர் எந்த காயமும் அடையவில்லை. இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.