தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக தேசிய வாக்காளர் நோக்கத்தைப் பொறுத்தவரை Conservative கட்சி Liberal களை விட முன்னேறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
கடந்த வாரம் நடத்தப்பட்ட Abacus Data கருத்துக்கணிப்பின் படி இன்றைய தினத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 41 சதவீத வாக்காளர்கள் Conservative களுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இது ஒரு சதவீத புள்ளி அதிகரிப்பாகும், அதே நேரத்தில் Liberal களுக்கான ஆதரவு நான்கு புள்ளிகளால் குறைந்து 39 சதவீதமாக மாறியுள்ளது.
கடந்த வார Alberta இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு காலத்தின் முடிவில் இக்கருத்துக் கணிப்பு கணக்கெடுக்கப்பட்டதனால் Conservative தலைவர் Poilievre இன் வெற்றி இந்த கருத்துக்கணிப்பில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் கட்டண அச்சுறுத்தலை விட கனடாவின் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே செல்வதையே கனேடியர்கள் முதன்மையான பிரச்சினையாக பார்க்கின்றார்கள் என்பதே வாக்காளர் நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்துடன் தொடர்புடையதாகத் தெரிகிறது.
வாழ்க்கைச் செலவு உயர்வை 60 சதவீத கனடியர்கள் முதன்மையான கவலையாகக் கருதுவதாக இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு கனடியர்களிடையே Trump ஒரு முக்கிய கவலையாக இருந்தாலும், பரந்த பொருளாதாரம், வீட்டுவசதி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை அவரை பிரதான காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் Conservative கள் Liberal களை விட முன்னோடியாக உள்ளனர்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் வீட்டுவசதி தொடர்பான தொடர்ச்சியான விரக்திகள் மக்களை மாற்றுத்தெரிவு நோக்கிய சிந்தனைக்கு வழிவகுத்திருந்தாலும், Carney அரசாங்கம் இன்னும் மக்களிடையே உறுதியான அங்கீகார மதிப்பீட்டை கொண்டுள்ளதுடன், பிரதமர் Carney தனிப்பட்ட முறையில் கனேடியர்களிடையே நன்கு விரும்பப்படும் ஒருவராகவே விளங்குகின்றார்.