16.1 C
Scarborough

கொலம்பியாவில் நடந்த இருவேறு சம்பவங்களில்17 பேர் உயிரிழப்பு

Must read

கொலம்பியாவில் இரு வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் உள்பட 17 உயிரிழந்துள்ளனர். இதில், காலி எனும் நகரில் உள்ள ராணுவ தளம் அருகே கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேநேரம் நாட்டின் வடக்கே மற்றுமொரு பகுதியில் பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், 12 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த ஹெலிகொப்டர், கொக்கைன் என்ற போதை பொருள் உற்பத்திக்கான கொகோவா இலை பயிர்களை அழிப்பதற்காக அமல்பி என்ற கிராமப்புற பகுதியில் இருந்து அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. கோகோ இலை பயிர்கள் அழிக்கப்படும் பகுதியின் மீது பறக்கும் போது குறித்த ஹெலிகாப்டர் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டது என ஆன்ட்டியோகுவியா கவர்னர் ஆண்டிரிஸ் ஜூலியன் உறுதி செய்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்துடன் செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை ஏற்காதவர்களால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறுகிறார்.

இந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கோகோ இலைகளை வளர்த்து கொக்கைன் தயாரிப்பதில் கொலம்பியாவில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article