ஸ்கார்பரோ (Scarborough) நீச்சல் குளத்தில் மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
ஸ்கார்பரோவில் (Scarborough) 40 வயதான நபர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மொன்டியோ டிரைவ் (Mondeo Drive) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நீச்சல் தடாகத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மரணத்திற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் இதுவொரு குற்றச்செயலாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.