வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்காவும் பாரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பயிற்சியில் 18,000 தென் கொரியர்கள் உட்பட 21,000 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேச நாடுகளின் தற்காப்பு என்று விவரிக்கும் இந்த பயிற்சிகள், வட கொரியாவின் பதிலைத் தூண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.