ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்குபற்றுகின்றன.
ஒரு பிரிவில் நான்கு அணிகள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14ஆம் திகதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்நிலையில் இப் போட்டியில் இந்திய அணி விளையாடவே கூடாது என விரும்புகிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்தியா எங்கு விளையாடினாலும் வெற்றியடையும். ஆனால், பாகிஸ்தானுடனான இந்த போட்டியை விளையாடவே கூடாது. விளையாடவும் மாட்டார்கள். நம்பிக்கையுடன் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.